10.5 சதவீத இட ஒதுக்கீடு சந்தேகமே? ராமதாஸ் அறிக்கை.!
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது பற்றிய ஆளுநர் உரையில் இல்லாதது அரசின் நோக்கங்கள் பற்றிய அச்சங்கள் ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

By : Thangavelu

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மைத்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 13 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
வேளாண்துறைக்கு என்று தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், வன்னியர்களுக்கு 10.5 சசதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது பற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இல்லாதது சந்தேகங்களை எழுப்புகிறது. இதனை போக்கி உடனடியாக சமூகநீதியை உறுதி செய்வதற்கும் அரசு நடவடிக்க எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.