Kathir News
Begin typing your search above and press return to search.

10 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத சோனியா'வின் வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகம் - RTI தகவல் அம்பலம்

10 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத சோனியாவின் வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகம் - RTI தகவல் அம்பலம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 Feb 2022 6:00 AM IST

சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமும் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள சொத்துக்களுக்கு எந்தவித வாடகையும் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆர்.டி.ஐ விண்ணப்பத்தின் பதில் படி காங்கிரஸ் கட்சி பங்களா 800 உட்பட 3 பங்களா களுக்கான நிலுவைத் தொகையை செலுத்தத் தவறி விட்டதாகவும் 26, அக்பர் சாலை (காங்கிரஸ் முன்னணி பிரிவு சேவா தளத்தின் அலுவலகம்) மற்றும் பங்களா C-2/109 சாணக்கியபுரி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 10, ஜன்பத் பங்களாவும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் 10, ஜன்பத் சாலையில் உள்ள வீட்டிற்கான நிலுவைத்தொகை கடந்த 2020'ல் செப்டம்பர் மாதம் செலுத்தப்பட்ட நிலையில் அதற்கான மாதாந்திர வாடகை ரூ 4,610 மட்டுமே இது மட்டுமல்லாமல் 26,அக்பர் ரோடு பங்களா இது காங்கிரஸின் தலைமையகமான இடமாகும் இதன் மாத வாடகை கடந்த 2012'ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தகவலை குஜராத்தின் மிதாப்பூரைச் ஊரைச் சேர்ந்த சுர்ஜித் பட்டேல் என்பவர் ஆர்.டி.ஐ தாக்கல் செய்தார் அவருக்கு பதிலாக இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் கடிதம் எழுதி கேட்டபொழுது மேற்கண்ட சொத்துகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே 2013 ஜூன் மாதத்தில் அனுமதித்தது பின் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு காலத்தில் நாட்டையே ஆண்ட கட்சி இன்று அது செயல்படும் அலுவலகம் மற்றும் தலைவர் குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை வழங்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பது காங்கிரஸ் கட்சியின் அவல நிலையை எடுத்துக் காட்டுகிறது.



Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News