வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு.. தருமபுரியில் அ.தி.மு.க., பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு.. தருமபுரியில் அ.தி.மு.க., பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!
By : Kathir Webdesk
தமிழக அரசுப் பணியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு தாக்கல் செய்துள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதும், அதிமுக, மற்றும் பாமகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பாமகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே போன்று இண்டூர் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.பி.பெரியண்ணன், பாமக ஒன்றிய செயலாளர்கள் மணி, சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாமக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதே போன்று கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வன்னியர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வருகின்றனர்.