Kathir News
Begin typing your search above and press return to search.

142 அடி எட்டுவதற்குள் திறக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை - வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு !

142 அடி எட்டுவதற்குள் திறக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை - வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு !

Mohan RajBy : Mohan Raj

  |  24 Nov 2021 10:19 AM GMT

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு மீண்டும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கேள்வி கேட்க வேண்டிய தமிழக அரசோ கேரளாவிடம் கைகட்டி நிற்கிறது.


முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 மாதமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பே அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'ரூல் கர்வ்' முறையை காரணம் காட்டி கேரளா அணையில் இருந்து வீணாக தண்ணீரை வெளியேற்றியது. 142 அடி வரை நீர் தேக்கலாம் என்பது தமிழகத்தின் உரிமை.


வருகிற 30-ந் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 141.50 அடியை எட்டியது. நேற்று 1862 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 4169 கன அடியாக அதிகரித்துள்ளது. இதே போல தமிழக பகுதிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 1800 கன அடி மின் உற்பத்திக்கும் 500 கன அடி நீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது.


தற்பொழுது கேரளாவுக்கு 4 ‌ஷட்டர்கள் வழியாக 1746 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 7531 மி.கன அடியாக உள்ளது. இதே அளவு மழை நீடித்தால் கூட இன்றோ அல்லது நாளையோ அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு கேரளா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது என தமிழக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இதனை தடுத்து தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்தின் உரிமையான 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி நிற்கிறது தி.மு.க அரசு.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News