Kathir News
Begin typing your search above and press return to search.

17 வயது சிறுமியை தன் 30 நண்பர்களுடன் சீரழித்த தி.மு.க ஐடி விங்க் பொறுப்பாளர் - சிறுமி குடும்பதிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்!

17 வயது சிறுமியை தன் 30 நண்பர்களுடன் சீரழித்த   தி.மு.க ஐடி விங்க் பொறுப்பாளர் - சிறுமி குடும்பதிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  29 April 2021 1:45 AM GMT

தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகி 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கருவை மிரட்டி கலைத்தது மட்டுமல்லாது, மேலும் தன் நண்பர்களுக்கு அப்பெண்ணை விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே இருக்கும் செம்பாக்கத்தில் தந்தையை இழந்து, தாய் மற்றும் சகோதரியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார். அந்த 17 வயதான சிறுமி ஏழ்மையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

குடும்ப ஏழ்மையின் காரணமாக பிழைக்க வேலை தேடி வந்துள்ளார் இதனை அறிந்த தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனது அலுவலகத்தில் அந்த சிறுமிக்கு வேலை தருவதக ஆசை வார்த்தை காட்டி அந்த சிறுமியை ஏமாற்றியுள்ளார். குடும்ப ஏழ்மை குறையுமே என அங்கே வேலைக்கு சேர ஒப்புக்கொண்ட சிறுமியை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

மேலும் அந்த சிறுமிக்கு மது கொடுத்து அந்த மயக்கத்தில் இருக்கும் போது தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.

இவ்வாறு தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். உடனே பிரச்சனை ஆகிவிடும் என்று செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 18 வயது ஆகிவிட்டது என பொய் கூறி அந்த சிறுமியின் கருவை கலைத்துள்ளார்.

இவ்வாறு தான் மட்டுமல்லாது தன் நண்பர்கள் மற்றும் தன்னுடன் சேர்ந்தவர்கள் என 30 பேரை அந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள வைத்து அந்த சிறுமியை நாசமாக்கியுள்ளார். இதனையறிந்த அந்த ஏழை குடும்பத்தினர் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனசேகரனை நியாயம் கேட்டுள்ளனர். தன் கட்சி மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் பயந்துபோய் அமைதியாக இருந்துவிட்டனர்.

இதனையறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனை தி.மு.க சமூக வலைதள நிர்வாகியாக தனசேகரன் தலைமறைவானார். மேலும் அவரது நண்பர்கள் கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

மேலும் இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என தி.மு.க சமூக வலைதள நிர்வாகி தனசேகரன் தன் அரசியல் செல்வாக்கு மூலம் அந்த ஏழை குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதை தொடர்ந்து அந்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News