Kathir News
Begin typing your search above and press return to search.

2ஜி ஊழலை விட மிகப்பெரிய ஊழல் வெளிப்பட போகிறது! சும்மா திமுக தலைமை பதறுமா?

2ஜி ஊழலை விட மிகப்பெரிய ஊழல் வெளிப்பட போகிறது! சும்மா திமுக தலைமை பதறுமா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jun 2023 9:45 AM IST

மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சபரீசன் ஏன் வந்து பார்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் டம்மி அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் சண்முகம் விமரசித்தார்.

இரண்டு ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அடித்த கொள்ளையை விசாரித்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய ஒரு ஊழல் வெளிப்படும்.

நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாகியும் அமைச்சராக தொடர்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரண்பாடானது.

கைது செய்யப்பட்டுள்ள அமைச்சருக்கு முதலமைச்சர் ஏன் இந்த அளவிற்கு இறங்கி வந்துள்ளார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது ஒரு முறை கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை.

மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு 03:30 மணிக்கு அமைச்சர் உதயநிதி வந்து பார்க்கிறார். முதலமைச்சர் வந்து பார்க்கிறார். சபரீசன் ஏன் வந்து பார்க்க வேண்டும்?

மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் ஓடோடி வந்து பார்ப்பது இந்த குற்றச்சாட்டை உண்மையாக்குவது போல உள்ளது. முதலமைச்சர் கூட இந்த அளவிற்கு வருமானம் பார்க்கவில்லை.

மின்சாரம், கலால் துறையை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதித்துள்ளார். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி வருமானம் வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மோசடி செய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தில் ரூ. 4000 கோடி மோசடி செய்து உள்ளார் என முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறினார்.

Input From: hindustantimes

Next Story
கதிர் தொகுப்பு
Trending News