Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை பாலியல் புகார்.. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்.!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக கூறியிருந்தார்.

நடிகை பாலியல் புகார்.. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2021 5:32 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக கூறியிருந்தார்.

நடிகை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீன்கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இரண்டு நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் பின்னர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இவரை தொடர்ந்து அடையாறு போலீசார் காவலில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News