Kathir News
Begin typing your search above and press return to search.

"2024'லையும் பா.ஜ.க'தான், எதிர்க்க யாரு இருக்கா?" - அடித்து சொல்லும் பிரஷாந்த் கிஷோர்

2024லையும் பா.ஜ.கதான், எதிர்க்க யாரு இருக்கா? - அடித்து சொல்லும் பிரஷாந்த் கிஷோர்

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jan 2022 12:00 PM GMT

"2024'ல் பா.ஜ.க'வை வெல்ல இப்ப உள்ள கட்சிகளால் முடியாது" என பிரபல தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்ட முடிவாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல தரப்பினரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில் பா.ஜ.க'வை எதிர்க்கும் கட்சிகள் இங்கு இல்லை என்கிற ரீதியில் பிரபல தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது, "2024'ல் பா.ஜ.க'வை வெல்ல நிச்சயமாக முடியும் ஆனால் தற்பொழுது உள்ள கூட்டணி கட்சிகளால் அது சாத்தியமா என தெரியவில்லை, 2024'ல் பா.ஜ.க'வை எதிர்கொள்ள நாட்டில் வலுவான கட்சிகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என கூறியுள்ளார்.

கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் நாளுக்குநாள் பலவீனமடைந்து செல்வது குறிப்பிடதக்கது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News