2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் உடையும் I.N.D.I.A கூட்டணி!
By : Sushmitha
இந்திய நாட்டின் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்தி வருகிறது, அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைத்த மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிர கள வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பாஜக தலைமையில் மற்றொரு முறை ஆட்சி அமையக்கூடாது என்பதை மையமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை அமைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிகளில் மத்தியில் உட்பூசல் இருப்பதும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை I.N.D.I.A கூட்டணி நீடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூட்டணி உடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முரண்பாடுகள் இருக்கக்கூடியவர்கள் ஒன்றிணைந்து நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குகிறோம்! கூட்டணி மோடி வெறுப்பு கூட்டணி ஆக மட்டுமே இருக்கிறது! ஆதலால் டிசம்பர் மூன்றாம் தேதி வரை பாருங்கள்! அன்று ஏற்படக்கூடிய கூட்டணி விரிசல் என்பது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே I.N.D.I.A கூட்டணியே இல்லாமல் ஆகிவிடும் என தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Source : Thanthi Tv