2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம்: அண்ணாமலை உறுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறும் போது, தொகுதி மறு வரையறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் எம்பி தொகுதிகள் எண்ணிக்கை குறையாது.
பாஜக கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது. திமுக அரசு சட்டமன்ற பிரச்சனை பற்றி, பாலியல் குற்றங்கள் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கோ, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தால் பாஜக அதில் பங்கேற்கும் திமுகவுக்கு, பாஜகவை விமர்சனம் செய்வதற்கு மட்டும்தான் நேரம் இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை.
தமிழக மீனவர்களின் டெல்லியில் மார்ச் 10ஆம் தேதி முதல் மார்ச் 15ம் தேதிக்குள் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் சந்திப்பார். மக்களின் பணத்தை வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி ஏமாற்றிவிட்டு அதை துறைக்கு மீண்டும் அமைச்சராக உட்கார்ந்துள்ளார்கள். உச்சநீதிமன்றமே அமைச்சராக தொடர வேண்டுமா என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவுக்கு முடிவு எழுதிவிட்டார்கள். அதனால் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியே விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு நல்லாட்சியில் கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு அண்ணாமலை கூறுகிறார்.