Kathir News
Begin typing your search above and press return to search.

2026 இல் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஆட்சி தான்: அடித்து கூறும் தமிழிசை சௌந்தரராஜன்!

2026 இல் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஆட்சி தான்: அடித்து கூறும் தமிழிசை சௌந்தரராஜன்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 April 2025 10:16 PM IST

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அப்பொழுது அவர் கூறுகையில், l2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்றால், இவர்கள் யாருடைய பணத்தை சுரண்டினார்கள்? அந்தப் பணம் தமிழக மக்களுடையது.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் சுருட்டிய பணம் மத்திய அரசிடம் கேட்பதைவிட அதிகமானதாக இருக்கும். அமைச்சர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பணத்தை இப்படி சுரண்டி மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை தடுத்து வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய ஆட்டம் 2026 உடன் முடிவடையும்" என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News