Kathir News
Begin typing your search above and press return to search.

22,500 கோடி, 341 கிலோ மீட்டர், மூன்றே ஆண்டுகள் - சகாப்தம் படைத்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு !

22,500 கோடி, 341 கிலோ மீட்டர், மூன்றே ஆண்டுகள் - சகாப்தம் படைத்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Nov 2021 11:00 AM GMT

புதிய மைல்கல் திட்டமான பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார்.


பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள சவுட்சராய் கிராமத்தில் தொடங்கி, ஹைதாரியா கிராமத்தில் முடிவடைகிறது. 341 கிலோமீட்டர் நீளம் கொண்டது இந்த அதிவேகச் சாலைத் திட்டம். ரூ.22,500 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதேசாலையில் குரேபர் என்ற இடம் அருகே போர் விமானங்கள் அவசர காலத்தில் இறங்குவதற்காக 3.2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலையை ஒட்டி விமான ஓடு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தின் கார்வால்கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, "உ.பி.யில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. உ.பி. அரசின் செயல் திறனை சந்தேகித்தவர்கள் தற்போது சுல்தான்பூர் வந்து பா.ஜ.க அரசின் வலிமையைக் காணலாம். சாதாரணமாக இருந்த இந்த இடம்இப்போது நவீன வடிவில் எக்ஸ்பிரஸ் சாலையாக மாறியுள்ளது.


இந்த மாவட்டத்தில்தான் பகவான் ஹனுமான், ராட்சசன் கல்னேமியைக் கொன்றார். அந்தப் பகுதிமக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்கள் சேவையில் பா.ஜ.க என்றென்றும் சிறப்பான பணிகளைத் தந்து வருகிறது" இவ்வாறு அவர் பேசினார்.


Source - The Tamil Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News