மாணவர்கள் நலன் கருதி 2ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்துங்கள்.. கமல்ஹாசன்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஆண்டு அதிமுக அரசு மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கியது. இந்த திட்டத்தால் பல லட்சம் மாணவர்கள் பலன் அடைந்தனர்.
By : Thangavelu

இதனிடையே ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் திமுக அரசு இலவசமாக வழங்கிய டேட்டாவை ரத்து செய்வதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், இது தொடர்பாக இலவசமாக 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான, கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால் 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.