Kathir News
Begin typing your search above and press return to search.

3 ஆண்டு சிறை, ₹50 லட்ச அபராதம்! ஊழலில் தண்டனை பெற்ற பொன்முடி!

3 ஆண்டு சிறை, ₹50 லட்ச அபராதம்! ஊழலில் தண்டனை பெற்ற பொன்முடி!
X

SushmithaBy : Sushmitha

  |  21 Dec 2023 1:42 PM GMT

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கில் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி கடந்த 2006 - 11 இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை 2015ல் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சுந்தரமூர்த்தி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆக இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடியும் வழக்கு குறித்து மறு விசாரணை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை முடிவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு செய்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது பதியப்பட்ட வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனைகளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த பி எஸ் ஓ அதிகாரிகளும், இனோவா காரும், பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு ஆயுதப்படை காவலர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

Source : The Hindu & News Tamil 24×7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News