இன்னும் 3 மாதங்கள் தானா? ஸ்டாலினுக்கு கடந்த 4 வருடங்களாக இந்த வியாதி இருக்கிறது!
இன்னும் 3 மாதங்கள் தானா? ஸ்டாலினுக்கு கடந்த 4 வருடங்களாக இந்த வியாதி இருக்கிறது!

By : Muruganandham M
கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை, தனது மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினார். தற்போது ஸ்டாலின் தனது மகன் உதயாநிதியை முன்னிலைப்படுத்தி வருகிறார். ஆக தி.மு.கவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. தி.மு.க கட்சி இல்லை, அது ஒரு கார்பரேட் கம்பெனி.

ஸ்டாலின் சேர்மன், உதயநிதி போர்டு ஆப் டைரக்டர், கனிமொழி, தயாநிதி மாறன் அனைவரும் போர்டு மெம்பர்கள். வருகின்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும்.
கழகத்தில் ஒரு சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ ஆகலாம், எம்.பி. ஆகலாம், மந்திரி ஆகலாம், ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். யார் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ, தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்கள் வீட்டின் கதவைத்தட்டி பதவி வழங்குகின்ற இயக்கம் கழகம்.

மக்களுக்கு உழைக்கின்ற இயக்கம் கழக இயக்கம். ஸ்டாலின் மட்டும் அல்ல, அவரைப்போல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் கழக தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது. ஸ்டாலின் கழகத்திற்கு இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது என கூறி வருகின்றார். கடந்த 4 வருடங்களாக இப்படித்தான் பேசி வருகின்றார்.
தி.மு.கவிற்கு குடும்பம் தான் முக்கியம். அ.தி.மு.கவிற்கு மக்கள் தான் முக்கியம்.என்று முதல்வர் கூறியுள்ளார்.
