Kathir News
Begin typing your search above and press return to search.

மேகதாது அணையை தடுக்க அனைத்து கட்சிகளும் டெல்லிக்கு வாங்க.. கெஞ்சும் தி.மு.க. அரசு.!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேகதாது அணையை தடுக்க அனைத்து கட்சிகளும் டெல்லிக்கு வாங்க.. கெஞ்சும் தி.மு.க. அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 2:03 PM IST

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் அமைந்துள்ள மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்று விவசாயிகள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜக சார்பில் வி.பி.துரைசாமி பேசும்போது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கும் எனக் கூறினார். இதே போன்று 13 கட்சிகளும் தங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும். மேகதாது அணை தீர்மானங்களை அனைத்து கட்சிகளும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கும் என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News