30 வருஷத்துக்கு முன் காஷ்மீரில் நின்று போட்ட சபதம்.... 370 விவகாரத்தின் பின் உள்ள மோடியின் சரித்திரம்.....
By : Mohan Raj
92 ஆம் ஆண்டு எடுத்த சபதம்...! 30 ஆண்டுகளில் கெத்தாக நிறைவேற்றி காட்டிய மோடி...!
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வராமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 370 என்கிற சிறப்பு அந்தஸ்தில் வந்தது. அதற்கு பிறகு 1957ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது. இதனால் இந்த மாநிலத்திற்கு என்று பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கான சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது இருப்பினும் அம்மாநிலத்திற்கென தனி அரசியல் அமைப்பும் செயல்பட்டது.
மேலும் மத்திய அரசு, சட்டப்பிரிவு 370 இன் படி பாதுகாப்பு வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிர ஏதாவது விஷயங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அம்மாநிலத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே இயற்ற முடியும்! இப்படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இருந்த காரணத்தினால் அம் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இரட்டை குடியுரிமையும் இரண்டு தேசியக் கொடியும் ஏதேனும் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமும் இல்லாமலும் இருந்தது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசித்த மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று நிலங்களை வாங்கவோ அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை வாங்கவோ முடியாத நிலையை இந்த சட்டப்பிரிவு 370 தாங்கிக் கொண்டிருந்தது. இப்படி இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலம் இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருப்பது போன்ற சட்ட அமைப்புகளை பெற்றிருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் சகஜ நிலையை அடைய வேண்டும் என்று கடந்த 1992 ஆண்டில் பிரதமர் மோடி லால் சவுக்கில் மூவர்ண கொடியை ஏற்றி சட்டப்பிரிவு 370 நீக்கியே தீருவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதற்குப் பிறகு 2015ல் மத்தியில் பாஜக தலைமையிலான பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பை ஏற்றார் அன்றிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நின்று 2018ல் முதல் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் இருந்த பொழுது மக்களின் பெரும்பான்மையான ஆதரவை ஜனநாயக கட்சியின் பாஜக திரும்ப பெற்றதை அடுத்து ஜம்மு காஷ்மீர் மீது பிரதமர் நரேந்திர மோடி தனி கவனம் செலுத்தினார். இதனால் 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் மற்ற மாநிலங்களுக்கு எப்படி பொருந்துகிறதோ அதே போன்று ஜம்மு காஷ்மீருக்கும் இனி பொருந்தும் என தெரிவித்தார்.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. எனினும் இப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் ரத்து செய்தது செல்லுமா என்ற வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று, ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 இன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும் என்றும் லடாக் யூனியன் பிரதேசமாக உருவாகியதும் செல்லும் என்றும் ஐந்து நீதிபதிகள் தலைமையிலான உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மேலும் 1992 ஆம் ஆண்டு போட்ட சபதத்தை சொல்லிய படியே செய்து சாதனை காட்டியுள்ளார் பிரதமர் மோடி என பாஜகவினர் பெருமிதமாக கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.