Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 3.5 கோடி பயனாளிகள் பயன்.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 3.5 கோடி பயனாளிகள் பயன்.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 July 2021 5:00 PM IST

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே பதவியேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அண்ணாமலை பேசியதாவது: கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு சிறப்பாக செலுத்தி வருகிறது. நேற்று மட்டும் 66 கோடி தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. ரூ.14,000 கோடி செலவில் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தரப்படுகிறது. அதில் 15 நாட்களுக்கு முன்பே தடுப்பூசி விவரம் மாநிலங்களுக்கு தரப்பட்டு விடுகிறது. மேலும், மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3.5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News