Kathir News
Begin typing your search above and press return to search.

370 நீக்கப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீரில் 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளனர் - வெளியான அதிகாரபூர்வ தகவல்

370 நீக்கப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீரில் 34 பேர்  சொத்துக்களை வாங்கியுள்ளனர் - வெளியான அதிகாரபூர்வ தகவல்
X

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2022 3:45 PM IST

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியில் இருந்து 34 பேர் யூனியன் பிரதேசத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது மற்றும் வெளியில் இருந்து வருபவர்கள் சொத்துக்களை வாங்குவதை தடை செய்த 370 வது பிரிவு, ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய மோடி அரசால் ரத்து செய்யப்பட்டது மற்றும் முந்தைய மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு பலதரப்பட்ட அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கிய தகவலின்படி, 'ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு வெளியே இருந்து 34 பேர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆர்டிகல் 370 ஐ ரத்து செய்த பிறகு சொத்துக்களை வாங்கியுள்ளனர்' என்று எழுத்துப்பூர்வ கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஜம்மு, ரியாசி, உதம்பூர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் சொத்துக்கள் அமைந்துள்ளதாக ராய் கூறினார். இன்றும் காஷ்மீரில் 370 நீக்கப்பது குறித்து சர்ச்சை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.


source - swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News