அநாகரீகமாக நடந்து கொண்ட 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. வெங்கையா நாயுடு அதிரடி நடவடிக்கை.!
அநாகரீகமாக நடந்து கொண்ட 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. வெங்கையா நாயுடு அதிரடி நடவடிக்கை.!

மாநிலங்களவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக 3 ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கோஷங்கள் எழுப்பி வந்தனர். மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் வெங்கையா நாயுடு அவர்களை இருக்கையில் அமருங்கள் என கேட்டுக்கொண்டார். ஆனால் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், நரேன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய மூன்று பேரும் கூச்சலிட்டனர். இதனிடையே 3 எம்.பி.க்களும் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதால், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இன்று நாள் முழுவதும் அவை நிகழ்ச்சிகளில் பங்குபெற கூடாது எனவும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.