Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 44,000 போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கை சீரழிக்க நினைத்த முயற்சி - அம்பலமாகும் உண்மைகள்.!

தமிழகத்தில் 44,000 போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கை சீரழிக்க நினைத்த முயற்சி - அம்பலமாகும் உண்மைகள்.!

தமிழகத்தில் 44,000 போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கை சீரழிக்க நினைத்த முயற்சி - அம்பலமாகும் உண்மைகள்.!

Muruganandham MBy : Muruganandham M

  |  19 Dec 2020 7:50 AM GMT

மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு ரோல் மாடலாக திகழும் முதலமைச்சர் எடப்பாடியாரால் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.21 கோடியில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வராது என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். பாரதப்பிரதமர், தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அடிக்கல் நாட்டியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக வரும்.

இதற்கு நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனம் இந்த இடத்தை ஆய்வு செய்து மிக சரியான இடம் என்று சான்று அளித்துள்ளது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக இந்தக் காலதாமதம். நிச்சயம் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகும். இதை விமர்சனம் செய்தவர்கள் கூட இதில் சிகிச்சை பெறுவார்கள்.

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அம்மாவின் அரசுக்கு எதிராக பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து அதன் மூலம் 44,000 போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கை சீரழிக்க நினைத்தனர். அதையெல்லாம் முதலமைச்சர் சாதுரியமாக சமாளித்து, இன்றைக்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்றி தமிழகத்தை அமைதி பூங்காவாக உருவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இன்றைக்கு இந்த 22 மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு 60,905 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்த்து 1,60,349 மக்களுக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உற்பத்தித்திறன் அதிகரித்து வருகிறது.

தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து உரிய வழிகாட்டி வருவதால் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு தொழில் முதலீடுகளை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News