Kathir News
Begin typing your search above and press return to search.

5 லட்ச ரூபாய் பேரமா? ஜெய் பீமா இல்லை பொய் பீமா? வெளிவராத உண்மைகள்!

5 லட்ச ரூபாய் பேரமா? ஜெய் பீமா இல்லை பொய் பீமா? வெளிவராத உண்மைகள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Nov 2021 10:14 AM GMT

ஜெய்பீம் உண்மை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் அந்தோணிசாமியை தப்ப வைக்க 5 லட்ச ரூபாய் பணம் சந்துரு மற்றும் கம்யூனிச கட்சிகள் பேரம் பேசயதாக அந்தோணி சாமியின் தங்கை மகன் பகீரங்க புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் காட்டுத்தீ போல பரவி வருகிறது சமூக வலைதளங்களில்.

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த படம் 'ஜெய்பீம்', இயக்குனர் ஞானவேல் இயக்கிய இப்படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் படம் வெளியாகி அது தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கும் போது அது 'ஜெய்பீம்' அல்ல 'பொய்பீம்' என தெரிகிறது.

படத்தில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் குரு என்று மாற்றி சித்தரிக்கப்பட்டிருக்கும் அதில் அதில் துவங்குகிறது 'ஜெய்பீம்'ன் முதல் பொய், பின்னர் அந்த காவல்துறை அதிகாரியை வன்னியராக சித்தரிக்க முயன்றது, சூர்யாவுடன் வலம் வரும் சிரிப்பு வழக்கறிஞர் கதாபாத்திரம் என பல இடங்களில் உண்மை கதை என கூறி உண்மைக்கு புறம்பான பல விஷயங்களை திரித்து கூறியுள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது காவல்துறை அதிகாரியாக படத்தில் குரு'வாக நிஜத்தில் அந்தோணி சாமியாக வருபவரின் சொந்த சகோதரி மகன் அதில் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டுள்ள சந்துரு பற்றி பகீர் உண்மையை போட்டு உடைத்துள்ளார். அவர் தொலைபேசி உரையாடலில் கூறியதாவது, "எங்கள் மாமா ஆய்வாளராக இருக்கும் போது நடந்த சம்பவத்தை படத்தில் காட்டியதற்கும் நிஜத்தில் நடந்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அதில் என்னவென்றால், அதில் சந்துரு மற்றும் கம்யூனிச கட்சி ஆட்கள் எங்கள் மாமாவை வழக்கில் சிக்கியவுடன் 5 லட்ச ரூபாய் பேரம் பேசினார்கள், அந்த சமயம் அவர் வாங்கிய சம்பள தொகைக்கு 5 லட்ச ரூபாய் பெரிய தொகை, சரி பிரச்சினையில் இருந்து விடுபட பணம் தயார் செய்ய முயன்றபோது 2.5 லட்சம் மட்டுமே தயார் செய்ய முடிந்தது ஆனால் 5 லட்ச ரூபாய் வேண்டும் என வழக்கறிஞர் சந்துரு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்கள் தகராறு செய்யவே எங்கள் மாமாவால் குடுக்க இயலவில்லை இதனால் அவரை வழக்கில் நன்கு சிக்க வைத்துவிட்டனர்" என்றார்.

மேலும் பேசிய அந்தோணி சாமியின் சகோதரி மகன், "படத்தில் வில்லனாக சந்துருவை காண்பித்திருக்க வேண்டும் அல்லது கம்யூனிச கட்சி ஆட்களை காண்பித்திருக்க வேண்டும், ஏனெனில் இவர்கள் தான் பணத்திற்காக பேரம் பேசிய வில்லன்கள்" என கொதிப்புடன் கூறினார்.

இப்படி இவர் கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. 'நீதியரசர்' என அடைமொழியோடு வலம் வரும் சந்துரு'வின் உண்மை முகம் கொஞ்சம், கொஞ்சமாக மக்களுக்கு தெரிய துவங்கியுள்ளது.


Source - Kathir YouTube Channel

Next Story
கதிர் தொகுப்பு
Trending News