பூத்திற்கு 5 தாமரை சின்னம்.. அசத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக.!
பூத்திற்கு 5 தாமரை சின்னம்.. அசத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக.!
By : Kathir Webdesk
தமிழக பாஜக பொதுமக்களிடையே ஒரு நல்ல அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது போன்றவை செய்து வருகிறது.
இந்து கடவுள் முருகனை திமுகவை சேர்ந்த கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் அவதூறான கருத்துகளில் வீடியோவாக வெளியிட்டது. இதற்கு முதன் முதலில் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி கயவர்களை சிறையில் அடைக்கும் வரை போராடியது பாஜக மட்டுமே. இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பது பாஜக மட்டும்தான் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூத்திற்கு 5 தாமரை சின்னம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தலைவர் முதல் ஒன்றிய தலைவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் தாமரை சின்னத்தை வரைவதை காணமுடிகிறது.
காவேரிப்பட்டினம், ஓசூர், வேப்பனப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பூத்களிலும் நிர்வாகிகள் தாமரை சின்னம் வரைந்து வருகின்றனர்.
இது மக்களிடையே வெகுவாக கவனிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.