50 ஆண்டுகளாக இயங்கி வரும் கல்வி நிறுவனத்தை முடக்க முயற்சி.. பின்னணியில் தி.மு.க நகரச் செயலாளர்..

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினத்தில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தை திமுக நகரச் செயலாளர் முடக்க முயற்சிப்பதாக கூறி அதிரை ஜமாத்தினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஒரு ஆதிராம் பட்டினத்தில் சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி பெற்று தங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் தற்பொழுது ஒரு சில நபர்களின் நிபந்தனைகள் மற்றும் பின்னணி காரணமாக இந்த ஒரு கல்வி நிறுவனத்தை முடக்குவதற்கு முயற்சிகள் எழுந்து இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அதிராம்பட்டினம் திமுக நகரச் செயலாளராகவும், நகர துணைத் தலைவராகவும் இருப்பவர் ராம குணசேகரன். இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகாலமாக இயங்கி வரும் முஸ்லீம் பெண்களுக்கான கல்வி நிறுவனத்தை தன் சுய லாபத்திற்காக முடக்க முயற்சிப்பதாக திமுக நிர்வாகி மீது குற்றஞ்சாட்டும் அதிராம்பட்டினம் ஜமாத் அமைப்பினர் இது பற்றி தன்னுடைய ஆர்ப்பாட்டத்தில் மற்றும் பின்னணி காரணங்களையும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது பற்றி அவர்கள் கூறும் பொழுது, "1975 ஆம் ஆண்டிற்கு பின்பு எங்கள் ஊரில் வசித்து வருபவர்கள் ஒன்று சேர்ந்து 'அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்த அறக்கட்டளை மூலம் முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக இமாம் ஷாஃபி பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை நிறுவினார்கள். அந்தப் பள்ளி நடத்துவதற்காக மேலே கண்ட இடத்தை நீண்ட கால குத்தகைக்கு விடும்படி கேட்டதன் பேரில் 1975 ஆம் ஆண்டில் அந்த பள்ளிக்கு அடிநில குத்தகைக்கு விடப்பட்டது. குறிப்பாக அந்த குத்தகை நிலத்தை பள்ளி நிர்வாகமே மிகுந்த பொருட்செலவில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடந்து வருகிறது.
இதனை அங்கீகரிக்கும் விதமாக அப்போதைய அரசு 2009 ஆம் ஆண்டு அவ்விடத்தை நம் பள்ளிக்கு விற்க முடிவு செய்து பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இவற்றுக்கு எதிராக ஆட்சேபித்து ராம குணசேகரன் அளித்த மனுவினை உள்நோக்கம் கொண்டது என அப்போதைய மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஐஏஎஸ் தள்ளுபடி செய்தார். இருந்தாலும் தற்பொழுதும் இந்த பிரச்சனை தொடர்வதாகவும் இதிலிருந்து தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: News