5000 கோடி பணத்துடன் முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற மர்மமென்ன?" - அண்ணாமலை கேள்வி

By : Mohan Raj
"5000 கோடி உடன் முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற மர்மமென்ன?" என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின வகுப்பு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச் சம்பவத்தை கண்டித்து விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க சார்பில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க அதுவரை அமைதியாக இருந்துவிட்டு நாங்கள் போராட்டம் அறிவித்த பிறகு தற்போது கருத்துக்கள் வருகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், "பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க பா.ஜ.க இருக்கும் என்பதை தெரியப்படுத்தவே இந்த போராட்டம் என்றார். 'முதல்வர் ஸ்டாலின் தற்போது துபாய்க்கு தனியா செல்லவில்லை அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது, முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி 5000 கோடி ரூபாயை அங்கு பறந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கை திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்?" என்ற கேள்வியுடன் உரையை முடித்தார்.
