Kathir News
Begin typing your search above and press return to search.

71வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர், சீன மொழியில் வாழ்த்து கூறிய தமிழக பாஜக! செம்ம கலாய்!

71வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர், சீன மொழியில் வாழ்த்து கூறிய தமிழக பாஜக! செம்ம கலாய்!
X

SushmithaBy : Sushmitha

  |  1 March 2024 6:44 PM IST

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் அந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆசிரியர் பங்கேற்றிருந்தனர் ஆனால் தூத்துக்குடியில் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.

இருப்பினும் தன் பொறுப்பில் உள்ள மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரையும் வரவேற்பதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் அன்றைய தினம் தமிழக நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியானது அந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரது புகைப்படங்களுக்கு பின்னால் ஒரு ராக்கெட் இடம்பெற்று இருந்தது அந்த ராக்கெட்டில் இந்திய கொடிக்கு பதிலாக சீனாவின் கொடி இடம் பெற்றிருந்தது.

இதற்கு பல தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர் மேலும் சமூக வலைதளங்களில் இது டிரால் செய்யப்பட்டது! இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார், அதற்கு தமிழக பாஜக முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மக்களின் மொழியான மாண்டரின் மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News