மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் - அண்ணாமலை!
மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் - அண்ணாமலை!

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு ஏற்படுத்தும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. நீட் முடிவுகள் தற்போது வெளி வந்து, மருத்துவ படிப்பு சேர்க்கை கவுன்சிலிங் துவங்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
இந்நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநரால் அனுமதி அளிக்கப்படாமல் இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை "கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன். மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று வலியுறுத்தி உள்ளார்.
கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன்.
— K.Annamalai (@annamalai_k) October 26, 2020
மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணாமலையின் அதிரடி பேச்சு, அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.