விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவைத் தலைவர் உட்பட 82 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவைத் தலைவர் உட்பட 82 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவைத் தலைவர் உட்பட மாற்று கட்சியில் இருந்து விலகி 83 பேர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் சார்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்று கட்சியினர் தங்களது கட்சியிலிருந்து இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர அவைத்தலைவர் மாரியப்பன் உட்பட 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த வார்டு இணைச் செயலாளர் பிச்சை உட்பட 20 பேர் , இருசக்கர வாகனம் மெக்கானிக் சங்கத்தினர் 25 பேர் என மொத்தம் 82 பேர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் இணைந்த இவர்களுக்கு மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் சரத்பாபு மற்றும் காங்கேயம் பா.ஜ.க. நிர்வாகிகள் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்களது செல்வாக்கினை பெற்றிருப்பதாகவும் அந்த தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.