Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்புக் குற்றங்கள் - ஒரு தொகுப்பு.!

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்புக் குற்றங்கள் - ஒரு தொகுப்பு.!

கடந்த வாரத்தில் மட்டும் நடந்த இந்து மத வெறுப்புக் குற்றங்கள் - ஒரு தொகுப்பு.!

Saffron MomBy : Saffron Mom

  |  26 Nov 2020 11:26 AM GMT

இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. பல்லாண்டுகளாக இந்த தாக்குதல்களுக்கு தாக்குதல்களின் அளவும், வீரியமும் உலகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்தது. கொலைகள், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம், நில அபகரிப்பு, பண்டிகைகளின் மீதான தாக்குதல், கோவில்களை சூறையாடுதல் மற்றும் கடவுள் சிலைகளை இழிவுபடுத்துதல், வெறுப்பு பேச்சு, சட்டரீதியான பாகுபாடு, இந்துக்கள் மீது எப்போதும் இல்லாத வகையில் வெறுப்புடன் நடக்கும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் இது போன்று இந்துக்கள் மீது நடந்த, வெளி உலகத்திற்கு தெரிய வந்த தாக்குதல்களின் தொகுப்பினை இங்கு வழங்குகிறோம்.

1. லவ் ஜிகாத்தின் மற்றொரு வடிவமாக, திருமணமான ஒரு முஸ்லிம் டாக்டர், விவாகரத்தான ஒரு ஹிந்து செவிலியரை தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கடந்த ஏழு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்தது வெளிவந்தது. பாதிக்கப்பட்ட செவிலியரின் கூற்றின்படி, போலியான அடையாளத்துடன் செவிலியரிடம் உறவை மருத்துவர் தொடர்ந்ததாகவும், தற்பொழுது தான் ஆறுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளும்படி மருத்துவரை கேட்டபொழுது இஸ்லாமுக்கு மதம் மாறினால் ஒழிய திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டதாக தெரிவிக்கிறார். மருத்துவரின் மனைவி செவிலியரின் வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

2. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு மகா காளி திருவுருவச்சிலை உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த லட்சுமிதேவி கோயில் இந்தியாவின் தொல்லியல் துறையைச் சேர்ந்தது.

3. திரிபுராவைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சகோதரிகள் அசாம் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கள் தாயை பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது, அவர்களது டாக்சி டிரைவர் மற்றும் 5 பேரினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்துல் அஸத், அபூபக்கர், அமீர் அலி, சம்சுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் இருந்த 4 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

3. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கம் மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி போன்ற சில மாநிலங்களை பின்பற்றி மகாராஷ்டிராவின் ஆற்றங்கரைகள், கடற்கரைகள், மற்றும் பிற நீர்நிலைகளில் இந்துப் பண்டிகையான சாத் பூஜையை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

4. நொய்டாவில் வசிக்கும் சாஹில் கான், தன்னை ஹிந்து என்று போலியாக காட்டிக்கொண்டு ஒரு இந்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அந்த உறவை முடிவுக்குக் கொண்டுவர 25 லட்சம் கோருகிறார். அந்த நபர் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்மணி குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் நொய்டா பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார் மற்றும் குற்றவாளியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

5. முகமது அமீர் மற்றும் சிலரிடமிருந்து, கன்வால் என்ற ஹிந்து சிறுமி பாகிஸ்தானில் தப்பித்தார். ஆனால் மாவட்ட நீதிபதியிடம், தன்னை பலாத்காரம் செய்து, கொடுமைப்படுத்தி, வலுக் கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்ததாகக் கூறினாலும் அவருடைய சொந்த பெற்றோர்களிடம் திருப்பி அனுப்பி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். எனில் அவரது பெற்றோர்கள் ஹிந்துக்கள்.

6. பா.ஜ.க முன்னாள் கவுன்சிலரும், தலைவருமான ஹரிஷ் சர்மா ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய நண்பர் ராஜேஷ் சர்மா அவரைக் காப்பாற்றப் போய் பரிதாபமாக இறந்துவிட்டார். தீபாவளியன்று பட்டாசு விற்பனை செய்ததற்காக, போலிசார் தொடர்ந்து அவர் மீது மிரட்டல்களும் அழுத்தங்களும் விதித்ததால் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் தகவல்களின்படி, பட்டாசு விற்பனையாளர்கள் போலிசாரினால் கைது செய்யப்படுவதில் ஷர்மா தலையிட்டார் என்று கூறப்படுகிறது. அவரது மகள் அஞ்சலி கூறுகையில் போலீசார் தொடர்ந்து தங்கள் குடும்பத்தை தொந்தரவு செய்து வந்ததாகவும், ஹரியானா உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு கூட தொந்தரவுகள் முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

7. பட்டாசு வெடித்ததாக கோபப்பட்ட ரஷீத் 3 ஹிந்து சிறுவர்களை அடித்தது மட்டும் இல்லாமல் அவர்களின் அம்மா மீனா தேவியை உத்தரபிரதேசத்தில் கொலை செய்தான்.

8. ஒரு முஸ்லிம் பெண்மணி தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு, பேஸ்புக்கில் மூலம் தொடர்பு கொண்டு ஒரு இந்து ஆணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அந்த ஆணும் அவருடைய அன்னையும் உத்திரப்பிரதேசத்தில் மனைவியின் சொந்த ஊருக்கு சென்ற பொழுது, அங்கே வலுக்கட்டாயமாக அவருக்கு சுன்னத் செய்யப்பட்டு அவர் மதமாற்றம் செய்யப்பட்டார். அவருடைய அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 80,000 ரூபாய் பணத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தினர்.

9. டெல்லியை அடித்தளமாகக் கொண்ட 46 வயது நீரஜ் குப்தாவின் தலை துண்டிக்கப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டு குஜராத்திலுள்ள ராஜ்தானி எக்ஸ்பிரஸில் போடப்பட்டது. இந்த கொடூரத்தை செய்தது அந்த ரயில்வேயில் உணவு துறையில் வேலை செய்யும் ஸுபைற் ஆவான்.

10. பெங்காலை சேர்ந்த 14 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக நிக்காமா வாசிக்க வைத்து சோகிடுல் ரஹ்மான் என்பவனால் குஜராத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டார்.

11. ஹைதராபாத்தைச் சேர்ந்த 13 வயது இந்து சிறுமியை 19 வயது அமன் கான் கடத்திச் சென்றான். உள்ளூர் ஊடகங்களில் தகவல் கசிந்த பிறகு அந்தப் பெண் மீட்கப்பட்டு அவருடைய பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

12. ராஜஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக ஒரு பள்ளி வளாகத்தில் நடந்த சண்டை கைகலப்பாக மாறியது. இச்சண்டையில் 5 இந்துக்களும் ஒரு முஸ்லிமும் காயமடைந்தனர். போலீசார் 3 பேரை கைது செய்த பிறகு ஒரு முஸ்லீம் கும்பல் வெறித்தனமாக செயல்பட்டது.

13. ஃபேஸ்புக்கில் தான் நட்பு பாராட்டிய ஒரு இந்து பெண்ணை தன் வலையில் விழ வைக்க அப்துல் ரசாக், தன் பெயரை சஞ்சு என மாற்றிக்கொண்டு, திலகமிட்டு ஒரு கோவிலுக்கு சென்ற மாதிரி புகைப்படங்களை வெளியிட்டார்.

14. பங்களாதேஷில் பரித்பூர் மாவட்டத்தில் இஸ்லாமியவாதிகள் இந்து குடும்பங்களுக்கு வைத்ததோடு மட்டுமல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அக்குடும்பங்களை மிரட்டினார்கள்.

15. பங்களாதேஷில் சிராஜகஞ் மாவட்டத்தில், ஒரு லோக்கல் ரவுடி முகமது கமால் ஒரு இந்து குடும்பத்தை மிரட்டி அவருடைய சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

16. பங்களாதேஷில் உள்ள குல்னா மாவட்டத்தில் ஒரு மகா காளியம்மன் கோவிலில் விலை மதிப்பு வாய்ந்த தங்க ஆபரணங்கள் திருடு போயின.

17. பங்களாதேஷில் டாக்கா மாவட்டத்தில், ஒரு ஹிந்து சிறுமி லதா ஹல்டர் நவம்பர் 15ஆம் தேதி கடத்தப்பட்டு முகமது நஷீத் மற்றும் நசீர் ஆகியோரால் கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றப் பட்டார்.

18. பங்களாதேஷில் போலச்சங் கிராமத்தில் உள்ள கடவுள் சிலைகள் திருடு போயின. காணாமல் போன சிலைகள் 19ஆம் தேதி நவம்பர் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் முஸ்லிம்கள்.

19. ராம் லால் பாபு என்ற ஒரு இந்து, முஹம்மது ரபீக் இஸ்லாம் என்பவனால் பங்களாதேசின் ராங்பூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டார்.

20. பங்களாதேஷின் ஜலோகட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோவிலில் சிவபெருமானின் திருவுருவச் சிலையின் தலையை இஸ்லாமியவாதிகள் உடைத்தனர். மேலும் மகாகாளி சிலையின் முகத்தையும் சேதப்படுத்தினர்.

21. அனிதா ராய் என்ற ஹிந்து சிறுமி பங்களாதேசின் டினாஜ்பூர் மாவட்டத்தில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு, முகமத் கலாம் என்பவனால் மதம் மாற்றப்பட்டார்.

22. பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் ஒரு ஹிந்து குடும்பம் கொடூரமாக தாக்கப்பட்டு, முஹம்மது ரஹாட் மற்றும் சிலரால் கொள்ளையடிக்கப்பட்டது.

பெரும்பாலான இந்து மத வெறுப்பு குற்றங்கள் சில மத போதனைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களில் ஹிந்து விரோத மதவெறியால் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து விரோத வெறுப்பு வெளிப்படையானது என்றாலும், ஹிந்து போபியா மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு சூழலை மதசார்பற்ற நாடுகளும் வழங்குகின்றன.

Courtesy: The Hindu Post.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News