விவசாயிகளுக்கு ரூ.20 கோடியில் பிரமாண்ட காய்கறி சந்தை அமைக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
விவசாயிகளுக்கு ரூ.20 கோடியில் பிரமாண்ட காய்கறி சந்தை அமைக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
By : Kathir Webdesk
விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலைநகரங்களில் ரூ.20 கோடியில் மிக பிரமாண்ட முறையில் சந்தைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, அதிமுக ஆட்சியை கலைப்பதற்காக திமுக எத்தனையோ சதிகளை செய்து பார்த்தது. ஆனால் அவை அனைத்தும் தவிடு பொடியானது.
தற்போது நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து 5வது ஆண்டில் முதலமைச்சராக தொடர்கிறேன். அதே போன்று விவசாயிகள் இரவு, பகல் என்று பாராமல் பூமியில் இரத்தம் சிந்தி உழைத்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்வில் சிறந்து விளங்குவதற்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. மேலும், ரூ.20 கோடியில் 10 மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகளின் நலனுக்காக பிரமாண்ட சந்தைகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். இந்த சந்தை ஒன்று நெல்லையிலும் அமைவதற்கு அரசு பரிசீலனை செய்யும் என கூறினார்.