Begin typing your search above and press return to search.
சிறுவன் அப்துல்கலாமுக்கு வீடு வழங்கியது மத்திய அரசு: வழக்கம் போல தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டியது தான் மிச்சம்!
By : Thangavelu
சிறுவன் அப்துல் கலாமுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஒன்றை வழங்குவதாகவும் அதற்கான ஆணையை அந்த சிறுவன் குடும்பத்தாரிடம் வழங்கினார். இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரின் பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு தருகிறார் என்று மீடியா முதல் கூட்டணி கட்சிகள் வரை புகழ்ந்தனர்.
இவர்களின் புகழ்ச்சி இரண்டு நாளிலேயே அம்பலமாகியுள்ளது. அதாவது சிறுவன் அப்துல்கலாமுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் ஆணையில், கீழே பிஎம்ஏஒய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மந்திரி திட்டத்தின் வாயிலாக கட்டப்பட்ட குடியிருப்பைதான் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். எனவே வழக்கம் போல திமுக அரசு இதிலும் தங்களின் அரசு கட்டிக்கொடுத்த வீட்டை போன்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. உண்மை எப்போதும் மறைக்க முடியாது என்பதற்கு இந்த ஆணையும் ஒரு சான்று.
Source, Image Courtesy: Facebook
Next Story