தேர்தலில் தி.மு.க. அதிகார துஷ்பிரயோகம்: நீதிமன்றத்தை நாடும் பா.ஜ.க.!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் போட்டியிட்டனர்.
By : Thangavelu
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் போட்டியிட்டனர்.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் ஒரு சில நகராட்சிகளை தவிர்த்து அனைத்தும் திமுகவே கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது மற்றும் அதிகாரிகளை கைகளில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் திமுக ஈடுபட்டது. இது பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் மனுவாக அளித்தது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்ததில்லை.
எதிர்க்கட்சியான பாஜக, அதிமுக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சொல்லும்படி திமுகவே பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்றனர். ஆளும் கட்சி என்பதால் பல அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது, இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழக பாஜக அணுகும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi