அன்வர் ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா சமீபத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஒருமையில் பேசினார். இது கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது.
By : Thangavelu

அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்கும் அடிதடி நடைபெறும் அளவிற்கு சண்டை ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்விதமாக நடந்து கொண்ட அன்வர் ராஜாவை உடனடியாக நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கப்பட்டது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/atEtNPQgxk
— AIADMK (@AIADMKOfficial) November 30, 2021
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர்ராஜா முன்னாள் எம்.பி., கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Twiter
Image Courtesy: Daily Thanthi