Kathir News
Begin typing your search above and press return to search.

வடம் பிடித்து இழுக்கப்படும் வம்பு, தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!

வடம் பிடித்து இழுக்கப்படும் வம்பு, தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 Jun 2022 12:31 AM GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளும் தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் தமிழர்களின் இறை நம்பிக்கையாளர்களின் பெருமையை, சகிப்புத்தன்மையை சோதித்துக் கொண்டேயிருக்கிறது. ஆன்மீகத் தலைவர்களையும், ஆதீனங்களையும், இறையடியார்களையும், திருக்கோயில் பொறுப்பாளர்களையும், தன்னார்வலர்களையும் தொடர்ந்து ஆளும் தி.மு.க. அரசு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இன்று கன்னியாகுமரியில் சர்ச்சை.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள தொல்காப்பியத்தில் சேரநாட்டு ஏரகம், என்றும் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் என்றும் பாடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க குமாரகோயில் என்ற முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும், ஆகம விதி முறைகளுக்கும் முரணாக, இறை நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த, அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் தேர்வடம் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்தபோது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களை மிரட்டி பக்தர்களை விரட்டி சீருடை அணியாத காவல்துறையினரை பயன்படுத்தி, வடம் பிடித்து இழுத்த தி.மு.க.வினர், இரண்டு தேர்களையும் நகர்த்தி, தெருவிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராடிய பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மதச்சார்பின்மை என்ற பெயரிலே ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மறுபக்கம் தமிழரின் பாரம்பரிய மரபுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவது ஆட்சிக்கு அழகல்ல. தெருவெல்லாம் மேடை போட்டு நாத்திகவாதம் பேசும்போது எந்த ஆத்திகரும் வந்து தடுப்பதில்லை. அதே போல ஆளும் கட்சிக்கு எப்போது இறை நம்பிக்கை இல்லையோ அப்போதே ஆலய வழிபாடும் பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டாமா? மேலும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசே அத்துமீறல் செய்யலாமா?

தி.மு.க.வினர் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஆர்.காந்தி அவர்கள், ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தின் குமரி மாவட்ட பொறுப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் அவர்கள், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்க மாநில பொறுப்பாளர் திரு.காளியப்பன் அவர்கள், பா.ஜ.க. மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் அவர்கள் உட்பட பலர் கைதாகி உள்ளனர். சுகாதாரத்துறையின் சத்துமாவு ஊழல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 'ஜி ஸ்கொயர்' ஊழல் ஆகியவற்றில் சிக்கியுள்ள தி.மு.க. அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப திடீரென்று இது போன்ற திசைதிருப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ என்ற எண்ணத்தை தவிற்க முடியவில்லை.

அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் சர்வாதிகார போக்கையும் அதற்கு முழுமையாக துணையாக இருந்து நீதிக்காக போராடிய பா.ஜ.க. மற்றும் ஆன்மீ இயக்க பொறுப்பாளர்களையும், பக்தர்களையும் கைது செய்த காவல்துறையும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, இன்று (11.06.2022) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் 11 இடங்களில் நடைபெற உள்ளது.

தி.மு.க.வின் தொடர், இறை நம்பிக்கைக்கு எதிரான அத்துமீறலுக்கு, நீதி கேட்டு நடைபெறும் இந்த போராட்டத்தில், பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளின் பொறுப்பாளர்களும் கட்சித் தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், மத நம்பிக்கையாளர்களும், ஆன்மீகவாதிகளும், வியாபாரிகளும், பொது மக்களும், தன்னார்வத்துடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சுகாதாரத்துறையின் சத்துமாவு ஊழல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 'ஜி ஸ்கொயர்' ஊழல் ஆகியவற்றில் சிக்கியுள்ள தி.மு.க. அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப திடீரென்று இது போன்ற திசைதிருப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்ற எண்ணத்தை தவிற்க முடியவில்லை. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twitter

Image Courtesy:Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News