சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று நேற்று சசிகலா தமிழகம் திரும்பினார். அப்படி அவர் திரும்பும்போது தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தினார்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும் சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என ஏற்கெனவே அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், சசிகலா கொடி கட்டிய சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.