தேர்தல் முடிந்த பின்னர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லலாம்.. வானதி சீனிவாசன்.!
தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2ம் தேதிக்கு பின்னர் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிப்பதற்கு கமல் செல்லலாம் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளேன்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி பாஜக வசமாகிறது. மான்செஸ்டர் என்று கூறப்பட்டாலும் அதனையும் தாண்டி சிறந்த நகரமாக மாற்றிக் காட்டுவோம். மேலும், சினிமா பிரபலங்கள் அனைவரும் அரசியலில் வெற்றி பெறுவதில்லை. திரைத்துறையில் வந்தாலும் மக்கள் பணி செய்தால் மட்டுமே அரசியலில் வெற்றிபெற முடியும்.
அது மட்டுமின்றி தொலைக்காட்சியில் வந்துவிட்டால் மக்கள் ஓட்டு போடமாட்டார்கள். மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு கமல் பிக்பாஸ் அல்லது சினிமாவிற்கு செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.