Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தலில் நிற்பதாக நான் எப்போதும் கூறவில்லை.. நடிகை குஷ்பு பேட்டி.!

தமிழக பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அனைவரும் பேசி வந்தனர். அதாவது சேப்பாக்கம் தொகுதியில் கண்டிப்பாக பாஜக சார்பில் போட்டியிடுவார் என ஊடகங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

தேர்தலில் நிற்பதாக நான் எப்போதும் கூறவில்லை.. நடிகை குஷ்பு பேட்டி.!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2021 7:30 AM GMT

தமிழக பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அனைவரும் பேசி வந்தனர். அதாவது சேப்பாக்கம் தொகுதியில் கண்டிப்பாக பாஜக சார்பில் போட்டியிடுவார் என ஊடகங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

இதனிடையே சேப்பாக்கம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கவில்லை, மாற்றாக பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குஷ்பு ஏமாற்றம் அடைந்தாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தது.




இந்நிலையில், நடிகை குஷ்புவிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு அவர் அளித்த பதில், நான் எப்போதும் தேர்தலில் போட்டியிடுவதாக கூறவில்லை. சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக அசாம், மேற்கு வங்கம் செல்வேன் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் தங்களுக்கு டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News