விக்க வைச்சோமா, வேஷம் போட்டோமா இருக்கணும்.. ஸ்டாலினுக்கு நடிகை விந்தியா ட்விட்டரில் பதிலடி.!
விக்க வைச்சோமா, வேஷம் போட்டோமா இருக்கணும்.. ஸ்டாலினுக்கு நடிகை விந்தியா ட்விட்டரில் பதிலடி.!
By : Kathir Webdesk
டிராமா கட்சி திமுகவை விரட்டியடிப்பதே லட்சியம் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், நடிகையுமான விந்தியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நமது அம்மா நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில்:
ஆத்தா என்பது நாகரிக அரசியலின் அடையாளமா? எந்த பயத்தில் இந்த அளவிற்கு கோபம் வருகிறது ராசாவிற்கு. சாமியை கூட ஆத்தான்னுதான் சொல்லித்தான் பழக்கம். அம்மாதான் எங்களுக்கு சாமி, நாங்க எங்க ஆத்தாவின் படத்தையும் கொள்கைகளையும் தூக்கிக்கிட்டு சுத்தறோம். தைரியம் இருக்குறவனை அடிச்சா திருப்பி அடிப்பான். கோழைங்கதான் பயத்துல சத்தமா அழுவும். ராஜாவும் அந்த மாறி ஒரு பயந்தாங்கொள்ளி குழந்தை.
ஒரு படத்துல வடிவேலு கூட வந்தவனை பயத்தோடு கேட்பாரு, ஏன்டா ஏன் கத்துறே.. நீயே மாட்டி விட்டுருவே போலருக்கேனு. அந்த மாறி எங்காயவது மறுபடி 2ஜி வழக்குல கைது பண்ணி உள்ள தள்ளிடுவாங்களேன்ற பயத்துல அழுவுற பாப்பாதான் ராஜா.
கேள்வி: திமுக மீது ஊழல் வழக்கு இல்லையா? பதில்: வேலை பாக்காம சம்பளம் வாங்கினவனை பாத்துருப்பீங்க. ஆனா சுயநினைவே இல்லாம ஒரு வருஷம் கருணாநிதி சம்பளம் வாங்கினார். இதுவே எவ்வளவு பெரிய ஊழல் தெரியுமா. திமுகவுல ஊழல் இல்லைன்னா கனிமொழியும் ராஜாவும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போயிட்டு வந்தாங்க.
கேள்வி: ஸ்டாலின் விக் மாற்றியது பற்றி உங்கள் கருத்து? பதில்: உண்மையான விவசாயின்னா உரம் போட்டு மண்ணுல பயிர் நடனும் பாரீன் போயி மண்டையில டேஷ் நடக்கூடாது. இலக்கை நம்பி வாழ்ந்தவன் கூட ஜெயிப்பான். விக்க நம்பி வாழ்ந்தவன் ஜெயிச்சதா சரித்தரமே கிடையாது.
கேள்வி: வட இந்தியாவில் இருக்கும் திகார் சிறை தமிழகத்தில் தெரிய வந்தது யாரால்? பதில்: தாத்தா, மொழி வளக்கறேன், மொழி வளக்கறேன்னு மொத்த மக்களையும் ஏமாத்தி வளர்த்தாரே ஒரு மொழி, கனிமொழி அவங்கலாத்தான் உள்துறை அமைச்சரை முதல்வர் பாக்க போனதே அவமானம்னா, திகார் ஜெயில்ல ஊழல் பண்ணி உள்ள போன கனிமொழிய எட்டு மந்திரியோடயும், துணைவியோடயும் போயி பாத்த தாத்தாவ என்ன சொல்லுவார் ராஜா. இவ்வாறு அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.