சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: அ.தி.மு.க.வில் இருந்து 15 பேர் நீக்கம்.!
சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அதிமுகவை சேர்ந்த 15 பேரை நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
By : Thangavelu

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கொறடாவா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்ட 15 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இன்று அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், சின்னசாமி, புகழேந்தி உள்ளிட்ட 15 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான தீர்மானமும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.