பஞ்சாயத்து அலுவலகத்தில் உதயசூரியன்: தி.மு.க. மீது அ.தி.மு.க. புகார்.!
போர்டிக்கோவில் திமுகவின் சின்னமான உதயசூரியன் வரையப்பட்டுள்ளது. இது அரசுக்கு சொந்தமான அலுவலகமாக அல்லது திமுக அலுவலகமா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

பஞ்சாயத்து அலுவலக மேற்பரப்பில் திமுகவின் சின்னமான உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது பெரும்பாண்டி. இதன் பஞ்சாயத்து தலைவராக பாஸ்கர் உள்ளார். இவர் கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார்.
இதனிடையே பஞ்சாயத்தை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் புதிதாக அமைக்கப்பட்ட போர்டிக்கோவில் திமுகவின் சின்னமான உதயசூரியன் வரையப்பட்டுள்ளது. இது அரசுக்கு சொந்தமான அலுவலகமாக அல்லது திமுக அலுவலகமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்டவர்கள், கும்பகோணம் ஆர்.டி.ஓ., அதிகாரி சுகந்தியிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உதயசூரியன் சின்னம் வரைந்துள்ளது குறித்து புகார் அளித்துள்ளனர். உடனடியாக அந்த சின்னத்தை அகற்ற வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.