Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது ! தி.மு.க.விற்கு அ.தி.மு.க. தலைமை கண்டனம் !

துடிப்பான கழக செயல்வீரர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது ! தி.மு.க.விற்கு அ.தி.மு.க. தலைமை கண்டனம் !
X

ThangaveluBy : Thangavelu

  |  10 Aug 2021 4:20 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப்பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்று ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன.

துடிப்பான கழக செயல்வீரர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரமின்றி ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.

இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும், அன்பும் வழியிலும் அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Admk

Image Courtesy: Admk Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News