Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், 66 இடங்களை கைப்பற்றியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமையை ஏற்று நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2021 12:09 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், 66 இடங்களை கைப்பற்றியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமையை ஏற்று நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியலுக்கு வருவதாக செல்போன் மூலமாக தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகின்றார். இந்த சம்பவம் அதிமுக தலைமைக்கு ஒரு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் உள்ள ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று கட்சி மாவட்ட செயலாளர்களிடையே ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக விரிவாக பேசப்படும். அதே போன்று வருகின்ற உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News