அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்பு!
அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
By : Thangavelu
அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது கடந்த 2014ம் ஆண்டு கட்சியின் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அவர் மறைவுக்கு பிறகு தற்போதுதான் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 2ம் தேதி கட்சி தலைமை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு முதலில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதனை தொடர்ந்து கிளை கழகம் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் வருகின்ற 13 முதல் 23ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தனர். இவர்களின் பெயர்களில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்தனர். சிலரும் தாங்களாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இரண்டு நாட்களில் 252 மனுக்கள் தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்தனர். இதில் அதிமுக உறுப்பினராக 5 ஆண்டுகள் நீடித்தவர்கள் மட்டுமே பதவிகளுக்கு போட்டியிட முடியும். அதன்படி 100க்கும் அதிகமானோர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே கட்சியின் இரண்டு பதவிகளுக்கும் போட்டியில்லாத நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இரண்டு பேரும் போட்டியின்றி தேர்வானதால் இன்று மாலை 4 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter