முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்.!
நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By : Thangavelu
நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். மேலும், தான் கர்ப்பம் அடைந்து மணிகண்டனால் கருக்கலைப்பு செய்யப்பட்டேன் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் ஜாமீன் கோரிய நிலையில் தற்போது நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.