அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்.. வானகரத்தில் குவியத்தொடங்கிய நிர்வாகிகள்.!
அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்.. வானகரத்தில் குவியத்தொடங்கிய நிர்வாகிகள்.!
By : Kathir Webdesk
அதிமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மண்டல பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் வானகரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெறுகின்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.
ஆகையால் அரசியல் கட்சியினர் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் மவுனம் காத்து வருகின்றது. இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.