அ.தி.மு.க. பொன்விழா: ஜெயலலிதா, எம்.ஜி.ஆர. நினைவிடங்களில் 3000 போலீசார் குவிப்பு !
அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
By : Thangavelu
அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று காலை (சனிக்கிழமை) மரியாதை செலுத்துகிறார். இதனையொட்டி காவல்துறை பாதுகாப்பு கோரி அவரது சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த இருப்பதாலும் அக்கட்சியின் சார்பிலும் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் (16 மற்றும் 17) ஆகிய இரண்டு நாட்களில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் அப்பகுதியில் சுமார் 3000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source,Image Courtesy: Puthiyalamurai