Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட் !ஜெயக்குமார் குற்றச்சாட்டு !

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட் !ஜெயக்குமார் குற்றச்சாட்டு !

ThangaveluBy : Thangavelu

  |  13 Aug 2021 12:50 PM GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக தாக்கல் செய்துள்ள பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாக இருக்கிறது. மேலும், மக்களுக்கு டிமிக்கி கொடுக்கின்ற பட்ஜெட்தான் திமுக அரசின் பட்ஜெட். பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.

நீட் தேர்வில் மாணவர்களை திமுக அரசு குழப்பி வருகிறது. பரிசீலனை செய்கிறோம், குழு அமைக்கிறோம், ஆராய்கிறோம் இதைத்தான் கூறி வருகின்றனர். ஒரு தெளிவான நிலை இல்லை. அது மட்டுமின்றி அடுத்து தமிழக மக்களுக்கு பெரும் இடியாக, பேருந்து, மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவைகளை உயர்த்த உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Topnews

Image Courtesy: Toptamilnews

https://www.toptamilnews.com/admk-jayakumar-criticism-on-dmk-budget/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News