Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. மீது எந்த விமர்சனமும் இல்லை - ஜி.கே.மணி.

சென்னை கிண்டியில், முன்னாள் அமைச்சரும் விடுதலை போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு பெற்றது சமூக நீதியின் மைல்கல் என்று கூறினார்.

அ.தி.மு.க. மீது எந்த விமர்சனமும் இல்லை  - ஜி.கே.மணி.

ThangaveluBy : Thangavelu

  |  16 Sep 2021 10:41 AM GMT

அதிமுக தலைமை மீது எந்த விமர்சனமும் இல்லை என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. இதனிடையே தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியது. இதற்கு பதிலடியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்குத்தான் இழப்பு எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில், முன்னாள் அமைச்சரும் விடுதலை போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு பெற்றது சமூக நீதியின் மைல்கல் என்று கூறினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து உடனடியாக முடிவெடுப்பதற்குள் தேர்தல் வந்துவிடும் என்று கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அது மட்டுமின்றி அதிமுக கூட்டணியிலிருந்து குறை கூற வெளியேறவில்லை என்று தெரிவித்த அவர், அதிமுக தலைமை மீது விமர்சனம் எதுவும் இல்லை என்றார்.

Source, Image Courtesy: News 7 Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News