தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னிலை வகிக்கும் அ.தி.மு.க. கூட்டணி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறும் என்று கூறிவருகிறார்.
எனவே அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் உள்ளனர் என பிரச்சாரத்தில் பேசி வருகின்றார். அவரது பேச்சு அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது. இதனிடையே எந்த கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு தனியார் ஏஜென்சிகள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக திமுக ஆட்சியை பிடிக்கும் என்று சில ஊடக நிறுவனங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டது.
ஆனால் தற்போதைய களநிலவரப்படி அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு அதிமுக அரசு கொரோனா தொற்றின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து மக்களுக்கு உதவிகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து வந்தது.
அது மட்டுமின்றி விவசாயிகள் கடன் தள்ளுபடி, மகளிர் கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், மற்றும் மாதம் தோறும் குடும்பத்திற்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்துள்ளது.
இந்த சூழலில் பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை தெரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி டெமாக்ரஸி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது என கூறியுள்ளது.
அதாவது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொங்கு மண்டலம் மிக வலுவாக உள்ளதாக கூறியுள்ளது. அதே போன்று தொண்டை மண்டலத்தில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளில் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளது.
அதிமுக மீது உள்ள சில எதிர்ப்பு வாக்குகள் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு பிரிந்து செல்கிறது. இதனால் திமுகவை விட அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். வாக்குகள் சிதறுவதால் குறைந்த எண்ணிக்கையில் கூட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அமமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இணைந்து 10 சதவீத வாக்குகளைப் பிரிக்கும் என்றும் இதனால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்காக, மீண்டும் அதிமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. இதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகளை தாண்டி தேர்தல் நெருங்கும் காலத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்குகம் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. வெற்றி பிரகாசமாக உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஊர்களுக்கு சிரித்த முகத்துடன் பிரச்சாரம் மேற்கொள்வதை காணமுடிகிறது.