அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் உண்மையா.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.
By : Thangavelu
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுகவில் நீண்டகாலம் அவைத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா மறைந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தில் அவருடன் கலந்து கொண்டு ஆதரவு அளித்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறை காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலரும் மதுசூதனன் உயிரிழந்துவிட்டதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது பற்றி அதிமுக தலைமை வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.